அவதூறு வழக்குகள்: நக்கீரன் கோபால் நீதிமன்றத்தில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபால் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை வரும் 19ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் நாகப்பா குறித்து நக்கீரன் இதழில் வெளியான கட்டுரைகள்தொடர்பாக 9 அவதூறு வழக்குகளை கோபால் மீது தமிழக அரசு தொடுத்துள்ளது.
சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோபால் இந்த வழக்குகள் தொடர்பாக இன்றுசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது வழக்கை வருகிற 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயபால் உத்தரவிட்டார். பின்னர் மீண்டும்கோபால் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications