For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிதம்பரம் கட்சி எம்.எல்.ஏவுக்கு நீதிபதி வழங்கிய நூதன தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Renganathanகொலை முயற்சி வழக்கில் காங்கிரஸ் ஜனநாயக் கட்சி எம்.எல்.ஏ. புரசை ரங்கநாதனுக்கு நூதன நிபந்தனை விதித்துசென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை அருகே உள்ள மதுரவாயல் என்ற இடத்தில் ஒரு விவசாயியுடன் ஏற்பட்ட நிலத் தகராறில் அவரைக்கொல்ல முயன்றதாக புரசை ரங்கநாதன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் ரங்கநாதன்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம், ரங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி.அப்படிப்பட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகியிருப்பதால், அவர் முதலில் தெளிவு பெற வேண்டியதுஅவசியமாகிறது.அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது.

அவர் செப்டம்பர் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை மதுரையில் தினசரி மதுரை காந்தி மியூசிய செயலர்அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும். இதற்காக ஒரு தனி பதிவேட்டை மியூசிய செயலர் ஏற்பாடுசெய்ய வேண்டும்.

பின்னர் தினசரி காந்தி மியூசிய நூலகத்தில் அமர்ந்து காந்தியடிகளின் சத்திய சோதனை நூல் உள்ளிட்டவற்றைபடிக்க வேண்டும்.

அதன் பின்னர் சென்னைக்கு வர வேண்டும். தி.நிகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் அமைந்துள்ளகாந்தி போதனை மையத்திற்கு சென்று செப்டம்பர் 29ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை கையெழுத்திடவேண்டும். அங்கும் அவர் சத்திய சோதனை புத்தகத்தை படிக்க வேண்டும்.

Judge Karpaga Vinayagamதனது மனதையும், அறிவையும் சரி செய்து கொண்டால்தான் ரங்கநாதனால், புரசைவாக்கம் தொகுதி மக்களுக்குசேவை செய்ய முடியும் என்பதால்தான் இந்த நிபந்தனைகள் என்றார் நீதிபதி.

அதன் பின்னர், ரங்கநாதன் கைது செய்யப்பட்டால் ஜாமீனில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும்உத்தரவிட்டார் நீதிபதி கற்பக விநாயகம்.

புரசை ரங்கநாதன் பல்வேறு ரெளடித்தனங்களுக்குப் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலைவயழக்குத் தவிர பல்வேறு கிரிமினல் வழக்குகள் இவர் மீது உள்ளன. பொது வாழ்வில் தூய்மை, நேர்மை, நியாயம்குறித்து ஊருக்கே உபதேசம் செய்து வரும் பா.சிதம்பரம் எப்படி இவரைப் போய் தன்னுடன் வைத்துள்ளார் என்றுபலமுறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X