அமைச்சர் கண்ணப்பனை கைது செய்ய தமிழக அரசு திட்டம்?: மத்திய அரசுக்குக் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை & கோவை:

விடுதலைப் புலிகளை தொடர்ந்து ஆதரிப்பேன் என்று பேசிய மதிமுக பொருளாளரும் மத்திய அமைச்சருமானகண்ணப்பனை பொடா சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கைது செய்வதற்கு வசதியாக அவரை பதவி நீக்கம் செய்யுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்எழுதவுள்ளது.

தியாக நெருப்பில் வைகோ என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய கண்ணப்பன், நாங்கள் தொடர்ந்து விடுதலைப்புலிகளை ஆதரிப்போம். இதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் கவலையில்லை. என்னைக் கைதுசெய்தாலும் கவலையில்லை என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவரைக் கைது செய்வதற்கு ஆதாரங்கள் திரட்டும் வேலையில் தமிழக உளவுப் போலீசார்ஈடுபட்டுள்ளனர். புலிகளை ஆதரித்துப் பேசும் கண்ணப்பனை கைது செய்ய வசதியாக அவரை பதவியை விட்டுநீக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் காவல்துறைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் கண்ணப்பனைக் கைது செய்ய வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று கோவையில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் பேசியகண்ணப்பன்.

நான் சுப்பிரமணியம் ஸ்வாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னைக் கைது செய்ய விரும்பினால்தாராளமாகக் கைது செய்யலாம். நாங்கள் புலிகளுக்கு ஆயுத உதவி செய்வோம் என்றோ, பொருளுதவிசெய்வோம் என்றோ கூறவில்லை.

இலங்கையில் உள்ள தமிழர்களைக் காத்த புலிகளை ஆதரிக்கிறோம் என்று தான் சொன்னேன். இதற்காகபொடாவில் கைது செய்ய தமிழக அரசு விரும்பினால், கைது செய்து கொள்ளலாம் என்றார் கண்ணப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+