பொடாவில் கைதான நக்கீரன் கோபால் ஜாமீனில் விடுதலை
திருச்சி:
பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.தமிழகத்தில் பொடா சட்டத்தில் கைதான ஒருவர் ஜாமீனில் வெளியே வருவது இதுவே முதல்முறையாகும்.
வீரப்பனுக்கும், தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் உதவியதாக சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட கோபாலைபின்னர் பொடா சட்டத்தில் சிறையில் அடைத்தது தமிழக அரசு. தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையின்நோட்டீஸ்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக கோபால் மீது போலீசார் குற்றம் சாட்டினர்.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி கைது செய்யப்பட்ட கோபால், கிட்டத்தட்ட 161 நாட்களாக சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். சட்டரீதியில் தனது கைதை எதிர்த்து இடைவிடாமல் போராடி வந்தார்.
தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபால் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,தன்னை போலீசார் கைது செய்துவிட்டு அவர்களாகவே கொண்டு வந்து துப்பாக்கியையும், தமிழர் விடுதலைப்படையின் நோட்டீஸையும் என்னிடம் இருந்தாகக் காட்டி பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். மேலும் சிறையில் தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறியிருந்தார்.
கோபாலின் இந்த மனுவின் மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி சண்முகம், நீதிபதி மாசிலாமணி ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச், கோபாலை ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்தது.
தினமும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெருநகர நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன் கோபால் ஆஜராக வேண்டும்என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே தான் பொடாவில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் கோபால் மனு தாக்கல்செய்துள்ளார். அதை விசாரித்த நீதிமன்றம், கோபால் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடாது எனபோலீசாருக்குத் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
தொகுதி தோறும் 2 கேமராமேன், ஒரு எடிட்டர்! தவெக எம்எல்ஏ-க்களுக்கு கட்சி தலைமை போட்ட 'இன்ஸ்டா' உத்தரவு! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications