இவரெல்லாம் ஒரு ஆளுநர்!
விழுப்புரம்:
திமுக மாநாட்டில் தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவுக்கும் டோஸ் விழுந்தது. அதிமுகவுக்கு ஆதரவாக அவர்ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பதாக திமுக கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலையும் துரைமுருகன் தான் தொடுத்தார். அவர் பேசியதாவது:
ஆளுநரின் செயல்பாடுகள் படு அசமஞ்சமாக இருக்கிறது. நடு நிலைமையுடன் செயல்பட வேண்டிய அவர்டெஸ்மா சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்ததன் மூலம், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வஞ்சித்து விட்டார்.
இப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்தலைமைச் செயலகம் கட்ட அரசு முயலுகிறது. இதையும்கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் கொஞ்சமாவது எதிர்ப்பு தெரிவிக்கவேண்டாமா?
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த எதிர்ப்பைக் காட்ட ஆளுநர் முன்வந்திருக்க வேண்டும். இனியாவது முன் வர வேண்டும்.
ஆட்சியாளர்களின் கருத்துக்கேற்ப ஆளுநர் செயல்படுகிறாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. நடுநிலைவகிக்க வேண்டிய அவர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவே நினைக்க வேண்டியுள்ளது.
என்ன செய்வது, இதுபோன்ற ஆளுநர்கள் இதற்கு முன்பும் இருந்துள்ளனர் என்று மாஜி ஆளுநர்பீஷ்மநாராயணன் சிங்கையும் ஒரு பிடிபிடித்தார் துரைமுருகன்.
சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் வாஜ்பாய் திமுக தலைவர் கருணாநிதியை ராஜ்பவனில் வைத்து சந்திக்கநினைத்தார். ஆனால், ஆளுநர் ராம்மோகன் ராவ் மீது கடுப்பில் உள்ள கருணாநிதி ராஜ்பவனுக்கு வரமறுத்துவிட்டார்.
இதையடுத்துத் தான் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குவரும்போது அங்கேயே வைத்து கருணாநிதியை சந்திப்பது என்று வாஜ்பாய் முடிவு செய்தார்.
வாஜ்பாயுடன் அப்பல்லோவுக்கு ராம்மோகன் ராவும் வர முயன்றார். ஆனால், கருணாநிதி அதை விரும்ப மாட்டார்என்பதால் ராவை வர வேண்டாம் என பிரதமர் கூறிவிட்டார். கடைசி நிமிடத்தில் வாஜ்பாய் விமான நிலையத்தில்காரில் ஏறும்போது கூட அப்பல்லோவுக்குச் செல்ல ராவ் முயன்றார்.
நான் மட்டுமே அப்பல்லோ செல்கிறேன் என்று ராம்மோகன் ராவிடம் கடுகடுத்த முகத்துடன் கூறிவிட்டுப்புறப்பட்டார் வாஜ்பாய் என விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஐ.பி. உளவுப் பிரிவினர்கூறுகின்றனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ரெக்கமன்டேசனில் ஆளுநரான ராவ், ஜெயலிலதாவுடன்நெருங்கிவிட்டதாக கருணாநிதி நினைக்கிறார். மேலும் நாயுடு- ஜெ நட்புக்கும் ராவ் முக்கிய பங்கு வகிப்பதாக திமுகநினைக்கிறது.
-
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications