பலியிட தடை: ஜெயலலிதாவுக்கு ஆர்.வி. பாராட்டு
சென்னை:
கோவில்களில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளதை முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் பாராட்டியுள்ளார்.
இந்திய சைவ காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் ஆர்.வெங்கட்ராமன் பேசுகையில்,
கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிடுவதை எந்தக் காரணம் கொண்டும் ஆதரிக்க முடியாது.
கடவுளையும், மிருகங்களை பலிகொடுப்பதையும் சமமாகக் கருத முடியாது. அனைத்து உயிர்களும் மதிக்கப்படவேண்டியவை.
இந்த சட்டம் தமிழகத்திற்கு மட்டும் போதாது, அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார்.
காஞ்சி மடத்தின் தீவிர பக்தர் ஆர்.வி. என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லித் தான்பலியிடத் தடை கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பேசப்படும் நிலையில் ஆர்.வி. இவ்வாறு பேசியுள்ளதுமுக்கியத்துவம் பெறுகிறது.
பூசாரிகள் எதிர்ப்பு:
இதற்கிடையே ஆடு, கோழிகளை பலியிட விதிக்கப்பட்டுள்ள தடை, மக்களின் வழிபாட்டு உரிமையைத் தடைசெய்யும் வகையில் உள்ளதாக மதுரை மாவட்டம் கருமாத்தூரில் நடந்த கோவில் பூசாரிகள் மாநாட்டில் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.
உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூரில் தமிழக கோவில் பூசாரிகள் நடந்த இந்த மாநாட்டில் ஏராளமான சிறுகோவில்கள், கிராமக் கோவில்களைச் சேர்ந்த பூசாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசியவர்கள், கோவில்களில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைகடுமையாக ஆட்சேபித்தனர். இந்தத் தடை, மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதாக உள்ளதாகஅவர்கள் கருத்து தெரிவித்தனர்.
-
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர்












Click it and Unblock the Notifications