கூடங்குளம் மின் நிலைய கருவியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
நெல்லை:
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட ராட்சத கருவி மின்சார வயரில் உரசியது.இதையடுத்து உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் லாரியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் தூக்கிவீசப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமையவுள்ளது. இந்த நிலையத்துக்கு மிகப் பெரியகருவி ரஷியாவிலிருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து லாரி மூலம் இந்தக் கருவி கூடங்குளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தக் கருவி மிக உயரமாகஇருந்ததால், மின்சார வயர்களில் உரசும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் இந்த லாரி செல்லும் வழியில் மின்இணைப்பைத் துண்டிக்குமாறு கூடங்குளம் மின் நிலைய அதிகாரிகள் மின் வாரியத்திடம் தெரிவித்திருந்தனர்.ஆனால், அதை மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் லாரி வந்தபோது, அந்தக் கருவி உயர் அழுத்த மின்சார வயரில்உரசியது. அதிலிருந்து பாய்ந்த மின்சாரம் லாரியைத் தாக்கியது. இதில் லாரியில் பயணம் செய்த ஒருவர்பலியானார். மற்றொருவர் தூக்கி வீசப்பட்டார்.
-
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications