பொடா விவகாரம்: தமிழக அரசை குறை கூற முடியாது- அத்வானி
டெல்லி:
பொடா சட்டத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்ட முடியாது என துணைப் பிரதமர்அத்வானி கூறினார். மேலும் கண்ணப்பனை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்குவது குறித்து பிரதமர் தான்முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார்.
விமானப் படை சிறப்பு விமானத்தில் பறந்தபடி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புலிகளை ஆதரித்துப் பேசியதால் கண்ணப்பனை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனவும்,அவரை பொடா சட்டத்தில் கைது செய்யப் போவதாகவும் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்எழுதியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மதிமுக தலைவர்களும் என்னைச் சந்தித்துப் பேசினர்.
ஆனால், கண்ணப்பன் தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது பிரதமர் தான். வெளிநாட்டில் இருந்து வந்த பின்பிரதமர் இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்.
பொடா சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசாக இருந்தாலும் அதை அமலாக்குவது மாநில அரசுகள் தான்.இதனால் இந்த சட்ட விவகாரத்தில் யாரும் (திமுக) மத்திய அரசை குற்றம் சாட்ட முடியாது.
இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த மாட்டோம் என உறுதி தந்தோம். இப்போதும் அதையே சொல்கிறோம்.
அதே நேரத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட மாநில அரசும் (தமிழ்நாடு) பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாககுற்றம் சாட்டிவிட முடியாது. இந்த வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருவதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். நீதிமன்றங்கள் தான் தவறா, சரியா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
அதே நேரத்தில் வைகோ விவகாரத்தில் பொடா மறு ஆய்வுக் கமிட்டியின் முன் இரு மனுக்களை மத்திய அரசுதாக்கல் செய்துள்ளது. அதில், வைகோவின் கைது பொடா சட்டத்தின் கீழ் செல்லுபடியாகாது என அரசுதெரிவித்துள்ளது என்றார் அத்வானி.
முதல்வர் ஜெயலலிதாவை விட்டுக் கொடுக்காமல் அத்வானி பேசினர். பிரதமர் வாஜ்பாய் விரும்பாவிட்டாலும் கூடஅத்வானி கோஷ்டியின் நெருக்குதலால் கண்ணப்பனை மத்திய அரசு கைகழுவி விடும் என்றே தெரிகிறது.
திமுகவுடனான கூட்டணி விஷயத்திலும் வாஜ்பாயின் கருத்து பா.ஜ.கவிலேயே எடுப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications