எங்களை கைவிட்டால்... பா.ஜ.க.
திருப்பூர்:
தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து எந்தக் கட்சி வெளியேறினாலும் அதனால் அந்தக் கட்சிக்குத்தான்பாதிப்பு ஏற்படும். வரும் தேர்தலில் அந்தக் கட்சி படுதோல்வி அடையும் என்று திமுகவுக்கு, அகில இந்திய பா.ஜ.க.தலைவர் வெங்கையா நாயுடு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூல் பாரதீய ஜனதாக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின் நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தைப் பொருத்தவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து எந்தக் கட்சி வெளியேறினாலும் நாங்கள்கவலைப்பட மாட்டோம். அப்படி வெளியேறும் கட்சிதான், வரும் தேர்தலில் படுதோல்வியை சந்திக்கவேண்டியதிருக்கும்.
அதேபோல, எந்தக் கட்சி எங்களது கூட்டணியில் சேர விரும்பினாலும் அதை நாங்கள் வரவேற்போம். புதியகட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தயங்க மாட்டோம் என்றார்.
திமுகவுடனான, பா.ஜ.க.வின் உறவு மோசமடைந்து வருவதையே நாயுடுவின் இந்தப் பேட்டி உணர்த்துகிறது.
முன்னதாக நேற்று நிருபர்களிடம் பேசிய நாயுடு, மத்திய அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டியது பிரதமர் தான். இதில் மாநில அரசு தலையிட எந்த உரிமையும் இல்லைஎன்றார்.
கண்ணப்பனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிப்பதற்குஇவ்வாறு நாயுடு பதிலளித்தார்.
பொடா சட்டம் தீவிரவாதத்தை ஒடுக்க கொண்டு வரப்பட்டது. அதை அரசியல்வாதிகளுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது. மேலும் மத்திய அமைச்சரவையில் யாரை வைத்திருக்க வேண்டும், யாரை வைத்திருக்கக் கூடாது எனபதைமுடிவு செய்ய வேண்டியது பிரதமர் தான். அவரது அதிகாரத்தில் யாரும், எந்த மாநில அரசும் தலையிடக் கூடாது.அதற்கு யாருக்கும் அதிகாரமும் இல்லை.
மத்திய அமைச்சர் கண்ணப்பன் மீது பொடா வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார்.
ஆனால் டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அத்வானி, ஜெயலலிதாவுக்கு ஆதரவாகக் கருத்துக்களைத்தெரிவித்ததைத் தொடர்ந்து இன்று நாயுடுவின் தொணியும் மாறிவிட்டது.
கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்தும், கூட்டணி குறித்தும் அக்டோபரில் மாநில பா.ஜ.க. தலைவர்களைடெல்லிக்கு அழைத்து விரிவாகப் பேசி முடிவெடுப்போம் என்றும் நாயுடு தெரிவித்தார்.
-
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர்












Click it and Unblock the Notifications