Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாதி பயம்: நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் தலித்கள் போட்டியிட மறுப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மாவட்டம் நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டகச்சியேந்தல் ஆகிய தலித் கிராமப்பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளுக்கு இந்த முறையும் யாரும் போட்டியிடவில்லை.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமர்ங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் கிராமப்பஞ்சாயத்துக்களுக்கும் கடந்த பல வருடங்களாக தேர்தலே நடைபெறவில்லை. தலித் பஞ்சாயத்துக்களாகஇருந்தாலும் கூட, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இந்த கிராமங்களில் அதிகமாக இருப்பதால், தலித்ஒருவர்தங்களது தலைவராக வருவதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

இதனால் தேர்தலை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர். இந் நிலையில் அக்டோபர் 9ம் தேதி இங்கு மீண்டும்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து, தேர்தலில் சுமூக சூழ்நிலை ஏற்படுவதற்காக,அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான உயர் மட்டக் குழு ஒன்றை அரசு அமைத்தது.

தேவர் சமூகத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் எம்.பி ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவினர்இந்த நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் சென்று முக்குலத்தோர் சமூக மக்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை தேவர் ஆட்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த ஆட்சி அனைவருக்கும் பொதுவானது என்பதை நிரூபிக்க முதல்வருக்குநீங்கள் உதவ வேண்டும் என முக்குலத்தோரிடம் பேசினார்.

மேலும் முக்குலத்தோர் சமூகத்தின் தலைகள் சிலருக்கு பணத்தை இந்தக் குழுவினர் வாரி இறைத்து வருவதாகவும்தெரிகிறது. ஆனாலும், அவர்கள் விட்டுத் தர மறுத்துவிட்டனர். எந்த கிராமத்திலும் தலித் போட்டியிடலாம்,நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்ற உறுதிமொழி கிடைக்கவில்லை.

வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்றே இறுதி நாளாகும். இந் நிலையில் பாப்பாட்டியில் 3 தலித்களும் கீரிப்பட்டியில்2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால், நாட்டார் மங்கலம் மற்றும் கொட்டாச்சியேந்தலில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதனால் இந்த முறையும் மக்கள் பிரதிநிதி இல்லாத கிராமங்களாகவே, நாட்டார்மங்கலமும்கொட்டக்கச்சியேந்தலும் இருக்கப் போகின்றன.

அதே நேரத்தில் கீரிப்பட்டி மற்றும் பாப்பாபட்டியில் வெற்றி பெறும் தலித் வேட்பாளர்கள் தலைவர்களாகநீடிப்பார்களா அல்லது கடந்த முறை இந்த முறையும் பதவியேற்ற கையோடு அதை ராஜினாமா செய்துவிட்டு ஊரைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுவார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+