சத்திய சோதனை படிக்கும் எம்.எல்.ஏ!
மதுரை:0
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள நூலகத்தில் அமர்ந்து,காந்தியடிகளின் சத்தியசோதனை உள்ளிட்ட புத்தகங்களை படித்து வருகிறார் சென்னை புரசைவாக்கம் தொகுதிஎம்.எல்.ஏ.ரங்கநாதன்.
புரசைவாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவான ரங்கநாதன், ப.சிதம்பரத்தின், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின்முக்கியப் பிரமுகர். சிதம்பரத்தின் வலது கையாவார். சென்னையில் கட்டப் பஞ்சாயத்து தொழில், கேபிள் டிவி எனதனி ராஜாங்கமே நடத்தி வருபவர்.
இவர் மீது வருமானத்தை மீறி சொத்து சேர்த்தது உள்பட பல கிரிமினல் வழக்குகள் உண்டு. நிலத் தகராறு ஒன்றில்விவசாயி ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதாக இருந்த இவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
அப்போது, அவருக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி கற்பகவிநாயகம் ஒரு நூதனமான நிபந்தனையையும்விதித்தார்.
அதன்படி, 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை மதுரை காந்தி அருங்காட்சியக, நூலகத்தில் அமர்ந்து காந்தியடிகளின்சுயசரிதையான சத்திய சோதனை உள்ளிட்ட காந்தி எழுதிய நூல்களை படிக்க வேண்டும். அதன் பிறகுசென்னைக்கு வந்து தக்கர் பாபா வித்யாலயாலவில் உள்ள நூலகத்தில் அமர்ந்து காந்தி புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்ற நிபந்தனை விதித்தார்.
அதன்படி மதுரை வந்த ரங்கநாதன் காந்தி அருங்காட்சியகம் சென்றார். அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டஅவர் பின்னர் நூலகத்தில் அமர்ந்து காந்தியடிகள் எழுதிய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார்.
சிறிது நேரம் புத்தகங்களைப் படித்த ரங்கநாதன் பின்னர் அங்கிருந்து கிளம்பினார். அருங்காட்சியகத்திற்கு வந்ததுமுதல் கிளம்பிச் சென்றது வரையிலும், ரங்கநாதனின் முகம் மிக இறுக்கமாக இருந்தது. அவருடன் மதுரை பகுதிகாங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பிரமுகர்களும் வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications