தமிழர் ஆதரவாளர்களை அழிக்க ஜெ. முயற்சி: கண்ணப்பன்
கோவை:
தவறே செய்யாத என் மீது பொடா சட்டத்தை ஏவுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவது, அடக்முகுறையின்வெளிப்பாடுதான் என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன் குற்றம் சாட்டினார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளை நான் தார்மீகமாகத்தான்ஆதரிக்கிறேன். ஆயுதமோ அல்லது பணமோ கொடுத்து உதவவில்லை.
தமிழர் ஆதரவு நடவடிக்கை எதையுமே ஜெயலலிதா ஆதப்பதில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போரைஅழித்தொழிக்க அவர் விரும்புகிறார்.
எம்.பியாகவும்,மத்திய அமைச்சராகவும், பதவியேற்றபோது நான் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை கிஞ்சித்தும்நான் மீறவில்லை. நான் என்ன அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி டான்சி நிலத்தை சுருட்டினேனா? சொத்துசேர்த்தேனா? ஊழல் செய்தேனா?.
ஜெயலலிதாவின் செயல்கள் அவரது அடக்முகுறை மனப்பான்மையின் வெளிப்பாடுகள் தான் என்றார்கண்ணப்பன்.
முன்னதாக நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்களுக்கு எதிராக உலகில் எங்கு வன்முறைநடந்தாலும், அதற்காக குரல் கொடுக்க வேண்டியது உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களின் கடமை.
அந்த வகையில், இலங்கை இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் தமிழர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்துவருகிறேன்.
மேலும், இலங்கைத் தமிழர்களுக்கு இப்போதைக்கு பாதுகாப்பாக இருப்பது விடுதலைப் புலிகள் மட்டும்தான்.இலங்கை அரசின் தமிழர் விரோத கொள்கைகளை கடந்த பல வருடங்களாக எதிர்த்துப் போராடி வருவது புலிகள்அமைப்பு மட்டும்தான்.
ஜெயலலிதா அரசின் எந்த நடவடிக்கையையும் சந்திக்க நான் தயார். புலிகளுக்கு இந்தியாவில் கிளைகள்கிடையாது. அவர்களுக்கு எந்த உதவியையும் நாங்கள் செய்யவில்லை. தார்மீகரீதியில் நாங்கள் வழங்கும்ஆதரவை அரசியல் உள்நோக்கத்தோடு ஜெயலலிதா பார்த்தால் பார்க்கட்டும் என்றார் கண்ணப்பன்.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications