பஞ்சாயத்து கொடுமையால் விவசாயி தற்கொலை
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் காசவளநாடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், பஞ்சாயத்தாரின் கால்களில் விழநேரிட்டதால் அவமானத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
காசவளநாடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி. அதே ஊரைச் சேர்ந்த திருவள்ளுவன் என்பவர்கோவில் கட்டுமானப் பணி தொடர்பாக, நாகலிங்கம் என்பவரிடம் ஒரு தகவலைக் கூறி வருமாறு, ரங்கசாமியைஅனுப்பி வைத்தார்.
ரங்கசாமியும் நாகலிங்கத்திடம் சென்று கோவில் கட்டுமானப் பணி தொடர்பாக திருவள்ளுவன் சொன்னதைக்கூறியுள்ளார். அதற்கு நாகலிங்கம் சொன்ன பதிலை திருவள்ளுவனிடம் வந்து கூறினார்.
ஆனால், தாங்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லி அனுப்பிய செய்தியை ரங்கசாமி திரித்துக் கூறிவிட்டதாகவும்இதனால் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் திருவள்ளுவனும், நாகலிங்கமும் பஞ்சாயத்திடம்கூறினர்.
இதையடுத்து ஊர்ப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அப்போது சொன்ன விஷயத்தை திரித்துக் கூறியதற்காகரங்கசாமிக்கு ரூ. 501 அபராதமும், ஊர் மக்கள் முன்னிலையில் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பஞ்சாயத்து தீர்ப்பளித்தது.
இந்த முடிவால் அவமானமடைந்தார் ரங்கசாமி. இருப்பினும், பஞ்சாயத்தில் கூறியபடி, தோப்புக்கரணம் போட்டுமன்னிப்பு கேட்டார். அபராதத்தையும் கட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.
தனது மானமே போய் விட்டதாக வீட்டில் வந்து அழுதுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் எவ்வளவோசமாதானப்படுத்தியும் அவர் சமாதானம் ஆகவில்லை.
புலம்பிக் கொண்டே இருந்த அவர், வீட்டுக்குப் பின்புறம் உள்ள புளியமரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்ததும், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வசந்தா விரைந்து வந்து விசாரணைமேற்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளுவன் தலைமறைவாகி விட்டார்.
தமிழகத்தில் கிராம பஞ்சாயத்து கும்பல்களின் அட்டகாசம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடந்த இருவாரங்களில் மட்டும் 2 பெண்கள் மண்டியிட வைக்கப்பட்டும், சேலை உருவப்பட்டும், தாலி பறிக்கப்பட்டும்அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இப்போது ஒரு விவசாயியின் உயிரையும் பறித்துள்ளது பஞ்சாயத்தின் தீர்ப்பு.
ஒரு புளிய மரம், அதில் ஒரு மேடை, அந்த ஊர் மைனர்- நாட்டாமை என கும்பல் உட்கார்ந்து கொண்டு அரசியல்சட்டம் பற்றியோ, மனித உரிமைகள் பற்றியோ கவலைப்படாமல் இஷ்டத்துக்கு தீர்ப்புகள் வழங்கி வருவதுதமிழகத்தில் புதிதல்ல.
நூற்றாண்டுகளாய் நடந்து வரும் இந்த பஞ்சாயத்துகளால் சமீப காலங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதைவிட, பிரச்சனைகள் மேலும் சிக்கலாவதே வழக்கமாகிவிட்டது.












Click it and Unblock the Notifications