இறுதி மூச்சு வரை கருணாநிதியை எதிர்க்க மாட்டேன்: வைகா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இனி என் வாழ்நாளில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக செயல்படவே மாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சிறையில் இருந்த வண்ணம் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது வாழ்க்கையில்கலைஞர் மட்டுமே தலைவர். துரதிர்ஷ்டவசமாக காலம் எங்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தி சிறிது காலம்பிரித்து வைத்து விட்டது. ஆனால், காயப்படுத்திய அதே காலமே இப்போது எங்களை சேர்த்தும் வைத்துள்ளது.

கலைஞர்தான் என்னை ஒரு அரசியல்வாதியாக மாற்றியவர். வைகோ என்ற வளர்ச்சிக்கு மூல காரணமேஅவர்தான். என்னை வந்து சிறையில் கலைஞர் பார்த்தவுடனே எனக்கு நிம்மதி வந்து விட்டது. சுமைகளை எல்லாம்இறக்கியது போல உணர்ந்தேன்.

இனிமேல் என் கடைசி மூச்சு வரை கலைஞரை நான் எதிர்க்கப் போவதில்லை என்ற முடிவை நான் எடுத்துள்ளேன்.

பொடா சட்டம் என் மீதே பாய்ந்தது முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், நான் சார்ந்துள்ளஆளும் கூட்டணியின்உதவியை நான் எதிர்பார்க்கவில்லை, அதை விரும்பவும் இல்லை. கூட்டணி தர்மத்தைக் காப்பதற்காகவே நாங்கள்பொடாவை ஆதரித்தோம்.

மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்னை சிறையில்வந்து சந்தித்தபோது கூட, என் வழக்கு விவகாரத்தில்பிரதமரோ அல்லது துணைப் பிரதமரோ தலையிட வேண்டாம் என்று தான் நான் கேட்டுக் கொண்டேன்.

இந்த வழக்கை சுயமாகவே சந்தித்து, வெற்றி பெற முடியும் என்ற அபார நம்பிக்கை எனக்கு உண்டு. நிச்சயம் வெளிவருவேன், மீண்டும் மக்கள் பணியாற்றத்தான் போகிறேன் . இனிமேல் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொருஅடியையும் அளந்து வைக்கப் போகிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+