மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: திமுகவுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு
சென்னை:
திமுகவுடன் கூட்டணி உள்ளதா, இல்லையா என்ற இரண்டும் கெட்டான் நிலைக்கு விரைவில் முற்றுப் புள்ளிவைக்கப்படும் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது. பொடா சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக முடிவுசெய்துள்ளதற்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
பொடா சட்டத்தை வாபஸ் பெற மறுக்கும் மத்திய அரசை எதிர்த்தும். சட்டத்தை அரசியல் பழிவாங்கலுக்குப்பயன்படுத்தி வரும் மாநில அரசை எதிர்த்தும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு எதிரே சிறை நிரப்பும்போராட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
இதற்கு பா.ஜ.கவின் பொதுச் செயலாளர் இல.கணேசன் கடும் கண்டன் தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் இன்றுஅவர் கூறுகையில்,
விழுப்புரத்தில் நடந்த திமுக மாநாட்டில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். பிரதமர்மெத்தனப்போக்கோடு செயல்படுவதாக பேசியுள்ளார்கள்.
வாஜ்பாயைச் சந்தித்து பொடா விவகாரம் தொடர்பாக பேச திமுகவுக்கு எவ்வளவோ சாத்தியக்கூறுகள் இருந்தும்,அதையெல்லாம் விட்டுவிட்டு மத்திய அரசுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாகக் கூறுவதுகண்டனத்துக்குரிய செயல். கூட்டணியில் இருக்கும் கட்சி எப்படி ஆட்சியை எதிர்த்து போராடலாம்?. இதுகூட்டணி தர்மம் அல்ல. திமுக இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மதில்மேல் பூனையின் நிலைமையில் திமுக உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் திமுகவுடன் கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற இரண்டும் கெட்டான் நிலையில் பா.ஜ.க. இருக்கமுடியாது. திமுக விஷயத்தில் எங்கள் கட்சியின் தொண்டர்கள் தெளிவான உத்தரவை மத்திய தலைமையிடம்இருந்து எதிர்பார்க்கிறார்கள். பிரதமர் நாடு திரும்பியவுடன் அவரைச் சந்தித்து இது குறித்துப் பேசுவோம்.
அதே நேரத்தில் பா.ஜ.கவாக எந்தக் கட்சியையும் தே.ஜ. கூட்டணியில் இருந்து வெளியேற்றாது.
தீவிரவாதம், தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்காகவே பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது.தமிழகத்தைப் பொருத்தமட்டில், வைகோ விவகாரத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகஏற்கனவே நாங்கள் கூறியுள்ளோம்.
மத்திய அமைச்சர் கண்ணப்பன் விவகாரம் குறித்து பிரதமர் தான் முடிவு செய்வார் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications