ரூ. 18,000 கோடியில் சென்னை நகர வளர்ச்சித் திட்டம்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
ரூ. 18,000 கோடி செலவில் சென்னை நகரின் அடிப்படைக் கட்டமைப்மை மேம்படுத்தும் திட்டம் அமலாக்கப்படஉள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை, தரமணி பகுதியில் அமெரிக்க சர்வதேச பள்ளி நிறுவப்பட்டுள்ளது. 10 ஏக்கர் பரப்பில்உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி அமெரிக்கப் பாடத் திட்டத்தைக் கொண்டதாக இருக்கும். 560 மாணவர்கள்இங்கு பயில முடியும். சென்னையில் உள்ள சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டினரின்குழந்தைகளுக்கு சர்வதேச தரத்தில் கல்வி வழகும் வகையில் இந்தப் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
இதை இன்று முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்துப் பேசுகையில்,
சென்னை பெருநகர் ஆசியாவிலேயே மிகச் சிறந்த நகரமாக விளங்குவதற்குத் தேவையான அனைத்துநடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
ரூ. 18,000 கோடியில் சென்னை பெருநகரில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக புதியதிட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை நகருக்கு அனைத்து வசதிகளும் கொண்டுவரப்படும். இருக்கும் கட்டமைப்பும் பல மடங்கு மேம்படுத்தப்படும்.
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து, கிழக்கு கடற்கரைச் சாலை வரை ஐ.டி. காரிடார் ஆகமாற்றியமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்துள்ளன. மற்ற நாடுகளும் தங்களதுமுதலீட்டை சென்னையில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வெளிநாட்டினர் இங்கு வந்துபணியாற்றும்போது அவர்கள் பல்வேறு நவீன வசதிகளை எதிர்பார்க்கிறார்கள். அந்த வசதிகள் அனைத்தும்சென்னைக்குக் கொண்டு வரப்படும் என்றார் ஜெயலலிதா.
இதன் பின்னர் சென்னை நகரில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிர் வங்கி கிளையை ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
கனரா வங்கியின் சார்பில் பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் மகளிருக்காகமகளிரை மட்டுமே கொண்டு இயங்கும் கிளைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
அதே போன்ற கிளையை இன்று முதல்வர் ஜெயலலிதா சென்னையிலும் தொடங்கி வைத்தார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications