ஜப்பானில் மிக பயங்கர பூகம்பம்: ரிக்டர் அளவு கோளில் 8 ஆக பதிவு

Subscribe to Oneindia Tamil

ஜப்பான்:

ஜப்பானை இன்று காலை மிக பயங்கர பூகம்பம் தாக்கியது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோளில் 8 என்ற அளவுக்கு இந்த பூகம்பம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வட பகுதியில் உள்ளஹொக்காய்டோ தீவில் இன்று அதிகாலை 4.50 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 2.20 மணி) இந்தநிலநடுக்கம் தாக்கியது. இதனால் கட்டடங்கள் அதிர்ந்தன. பல வீடுகள் சாய்ந்தன. அடுத்ததாக 6 மணியளவில்மீண்டும் பூகம்பம் தாக்கியது.

கடலில் மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கத்தால் அலைகள் மிக அதிக உயரத்தில் வீசி வருகின்றன. குஷிராஎன்ற நகரில் 1.3 மீட்டர் உயரத்துக்கு எழும்பிய அலைகள் நகருக்குள் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் படகுகள் நகருக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

தொடர்ந்து பூகம்பம் நேரிட்டால் மேலும் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழ வாய்ப்பிருப்பதால்கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என மக்களை அரசு எச்சரித்துள்ளது.

நிலநடுக்கத்தின்போது ஹொக்கோய்டோ தீவில் சென்று கொண்டிருந்த ரயில் தடம்புரண்டது. இதில் 39 பயணிகள்படுகாயமடைந்தனர். டோமாகோமாய் நகரில் நிலநடுக்கத்தால் கேஸ் குழாய்கள் உடைந்து இடிமிட்சு நிறுவனத்தில்தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.

இந்த நகரின் சாலைகள் பிளந்துள்ளன. விமான நிலையமும் சேதமைடந்துள்ளது.

இந்த ஆண்டில் இவ்வளவு சக்தி வாய்ந்த (ரிக்டர் அளவுகோளில் 8) நிலநடுக்கம் உலகின் எந்தப் பகுதியையும்தாக்கியதில்லை. ஆனால், நில நடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஜப்பானின் வீடுகள் தான்பெரும் உயிர்ச் சேதத்தைத் தவிர்த்துள்ளன.

இதில் 243 பேர் வரை காயமடைந்துள்ளனர். சுமார் 41,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளது.

பசிபிக் கடலில் ஜப்பானில் இருந்து 100 கி.மீ. தொலைவில், 60 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+