காதலர்களை முட்டி போட வைத்த எஸ்.ஐ.: மனித உரிமை ஆணையம் விசாரணை
சென்னை:
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காதலர்களை முட்டி போட வைத்ததாக எழுந்த புகாரின்பேரில் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிமொழியிடம் மனிதஉரிமை ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.
கரூரைச் சேர்ந்த சார்லஸ் மற்றும் சுபத்ரா ஆகிய இரு காதலர்களும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கோரி, பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் மணிமொழி, காதலர்கள் இருவரையும் திட்டியதோடு, அரைமணி நேரம் முட்டிக் கால் போடுமாறு பணித்துள்ளார். வேறு வழியின்றி காதலர்கள் இருவரும் முட்டிக் கால்போட்டபடி இருந்தனர்.
இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது. இதையடுத்து சென்னையில் உள்ளமாநில மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விசாரிக்குமாறு தனது இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமியைபணித்தது.
இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி, சப் இன்ஸ்பெக்டர் மணிமொழியிடம் விசாரணை நடத்தினார். காதலர்கள்சார்லஸும், சுபத்ராவும், சென்னைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்தது. சப் இன்ஸ்பெக்டர்மீது தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமைகள்ஆணையம் கூறியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications