ஸ்ரீதேவியின் கட்டடத்தை இடிக்க உயர் நீதிமன்றம் மீண்டும் தடை
சென்னை:
நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள 8 மாடிக் கட்டடத்தின் முதல் 4 மாடிகளை இடிக்கசென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர், சி.ஐ.டி. காலனி பகுதியில் ஸ்ரீதேவிக்குச் சொந்தமான இடத்தில், 8 மாடிக் குடியிருப்புகட்டப்பட்டுள்ளது. சாந்தி பில்டர்ஸ் நிறுவனம் இந்த குடியிருப்பை கட்டியுள்ளது.
4 மாடிகளை மட்டுமே கட்ட அனுமதி அளித்திருந்த நிலையில் கூடுதலாக 4 மாடிகளைக் கட்டியதால் கட்டடம்ஆட்டம் கண்டது. இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி கட்டப்பட்ட முதல் நான்குதளங்களை இடித்துத் தள்ள சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்ரீதேவி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இதைத் தொடர்ந்து கட்டடத்தை இடிக்க இடைக்காலத்தடை பிறப்பித்த நீதிமன்றம் 3 பொறியாளர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டது. அந்தக் குழுகட்டடத்தை ஆராயந்தது.
கட்டடம் அபாயகரமான நிலையில் இருப்பதால் இடிக்கலாம் என்று பொறியாளர் குழு பரிந்துரைத்தது.இதையடுத்து மாநகராட்சியின் இடிப்பு நடவடிக்கை சரியானதே என்று நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஸ்ரீதேவி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனுவை விசாரித்ததலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கட்டடத்தைஇடிப்பதற்கு மாநகராட்சிக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
அதே நேரத்தில் அந்தக் கட்டடத்தில் கட்டுமானப் பணிகளும், வேறு யாரையும் குடியமர்த்துவதற்கும் தடை விதித்துஉத்தரவிட்டனர்.
இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications