வெங்கடேச பண்ணையார் சுடப்பட்டு சாவு: நாடார் இன மக்கள் கடும் அதிருப்தி
தூத்துக்குடி:
சென்னை போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் உடல் அவரது சொந்த ஊரானதூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
| மூலக்கரை அருகே உள்ள அம்மன்புரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் பண்ணையார். பெரும்பணக்காரரான இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்தது,கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதையடுத்து அவர்களை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கிராமத்தினர் எடுத்துச் சென்றனர். |
சென்னையிலும் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பன்னாட்டு நிறுவனத்தை மிரட்டி பணம்பறித்தாகவும் மற்றும் ஒரு கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அவரை ஒரு ரெளடியாகவேபோலீசார் சித்தரிக்கின்றனர்.
ஆனால், 1,500 ஏக்கர் நிலமும் பரம்பரையாக கோடிக்கணக்கான பணமும் வைத்திருப்பவர் வெங்கடேசபண்ணையார் என நாடார் இனத்தினர் கூறுகின்றனர். லட்சங்களுக்காக யாரையும் கடத்த வேண்டிய அவசியமேஅவருக்கு இல்லை என்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் இன்னொரு தாதாவான பசுபதி பாண்டியனை அடக்குவதில் வெங்கடேச பண்ணையார்முக்கிய பங்கு வகித்ததாகவும் இதனால் தான் தங்களது இனத்தைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையாரை போலீசார்சுட்டுக் கொன்றுள்ளதாகவும் நாடார் இன மக்கள் கருதுகின்றனர்.
பசுபதி பாண்டியன் மற்றும் வெங்கடேச பண்ணையார் ஆட்கள் இடையே மோதலும் அடிதடியும் நடப்பது சர்வசாதாரணம் எனவும், இதில் பல கொலைகள் விழுந்துள்ளதாகவும், ஆனால் பாண்டியனை விட்டுவிட்டுவெங்கடேசனை மட்டும் போலீசார் தாதா மாதிரி பத்திரிக்கைகளில் சித்தரித்து, கொன்றுவிட்டதாக அந்த இனமக்கள் கூறுகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் அவரை போலீஸார் பிடிக்கச் சென்றபோது அவர்தாக்குதல் நடத்தவே, மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையான் உடல் அவரது சொந்த ஊரான அம்மன்புரத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு அகில இந்திய நாடார் இளைஞர் சங்கத் தலைவர் சுதர்சன் (நடிகர் சரத்குமான் அண்ணன்)உள்ளிட்ட நாடார் சமுகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
வெங்கடேச பண்ணையாரின் உடல் அடக்கத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. மேலும், திருச்செந்தூர் அருகே உள்ள சோனைகன்விளை பகுதியில் பஸ்சை நிறுத்திபயணிகளை இறக்கி விட்ட ஒரு கும்பல், பஸ்சுக்கு தீ வைத்தது.
இதையடுத்து அம்மன்புரம் பகுதியில் உடல் அடக்கம் நடந்தபோது ஏராளமான போலீஸார் துப்பாக்கிகளுடன்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை, எளியவர்களுக்கு பெருமளவில் உதவிகளை செய்து வந்துள்ளார் வெங்கடேசபண்ணையார். மேலும் மும்பை வாழ் தமிழர்களின் சில கோரிக்கைகளுடன் மகாராஷ்டிர முதல்வர் சுசில் குமார்ஷிண்டேவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட நாடார் இனத்தினர் மத்தியிலும் இவருக்குபெரும் செல்வாக்கு இருந்துள்ளது. இப் பகுதியில் நாடார் இனத்தினரை பிறர் தாக்கும்போது நாடார்களுக்குஆதரவாக களம் இறங்கி வந்துள்ளார் வெங்கடேச பண்ணையார்.
அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழக இளைஞரணிச் செயலாளர் கட்டத்துரையைக் கொலை செய்தவர்களுக்குவெங்கடேச பண்ணையார் முழு உதவி செய்துள்ளார்.
இந் நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஜாதி சாயம் பூசட்டப்பட்டு வருகிறது. போலீசார் மீதும்அதிமுகவினர் மீதும் நாடார் இனத்தினர் மத்தியில் கடும் அதிருப்தி பரவி வருகிறது.
வெங்டேச பண்ணையாரின் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் முதல்வர் ஜெயலலிதாவையும், நாடார்சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்டத்தின் பல இடங்களில் அதிமுக பேனர்கள், தட்டிகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன.
-->












Click it and Unblock the Notifications