வாஜ்பாயை சந்தித்தார் கண்ணப்பன்: சட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறார் பிரதமர்
டெல்லி:
தமிழக அரசு பொடா சட்டத்தின் கைது செய்யத் திட்டமிட்டுள்ள மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கண்ணப்பன் இன்று பிரதமர் வாஜ்பாயைச் சந்திதார்.
கண்ணப்பன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருவதால் அவரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யத்திட்டமிட்டுள்ளதாகவும், எனவே அவரை மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பிரதமர்வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
அப்போது பிரதமர் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தார்.
நேற்று முன் தினம் டெல்லி திரும்பிய வாஜ்பாயை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து அமைச்சர் கண்ணப்பன்சந்தித்துப் பேசினார். மேலும் விடுதலைப் புலிகள் தொடர்பாக தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார்.
அவருடன் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மதிமுக எம்.பியானகிருஷ்ணன் ஆகியோரும் சென்றிருந்தனர். சுமார் 45 நிமிடங்கள் அவர்கள் வாஜ்பாயுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கண்ணப்பன், நாங்கள் சொன்னதை பிரதமர் விவரமாகக் கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்தது. புலிகள் தொடர்பாக நான் என்ன பேசினேன் என்பதுகுறித்து ஒரு விளக்கக் கடிதத்தையும் பிரதமரிடம் தந்தேன். இலங்கையில் கொல்லப்பட்டு வந்த தமிழர்களைக்காப்பாற்றிய விடுதலைப் புலிகளை தார்மீகரீதியில் ஆதரிப்பதாகவே சொன்னேன். இதை பிரதமரிடமும்கூறிவிட்டேன். ஆனால், அதைத் திரித்து என்னை பொடாவில் கைது செய்ய ஜெயலலிலா முயல்வதையும்விளக்கமாக எடுத்துச் சொன்னேன் என்றார்.
இதன் பின்னர் பிரதமர் அலுவல செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் பேசுகையில், மதிமுக குழுவினரின்கருத்துக்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். சில சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுக் கொண்டார். தமிழகமுதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் குறித்தும், கண்ணப்பன் அளித்துள்ள விளக்கம் குறித்து சட்ட அமைச்சர்அருண் ஜேட்லியுடன் பிரதமர் விவாதிப்பார் என்றார்.
சட்ட அமைச்சர் ஜேட்லி துணைப் பிரதமர் அத்வானியின் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அத்வானி சொல்லித் தான் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதமே எழுதினார் என்று கூறப்படுவது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications