பார்த்திபன்-- சீதா "டைவர்ஸுக்கு" விண்ணப்பம்
சென்னை:
கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் இயக்குனர்- நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா ஆகியோர்முறைப்படி விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பார்த்திபன்.அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அதுகல்யாணத்தில் முடிந்தது.
இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இந்த நட்சத்திர தம்பதிகள், பின்னர் ராதாகிருஷ்ணன் என்ற ஆண்குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
அமைதியான நதி போல ஓடிக் கொண்டிருந்த இவர்களது காதல் வாழ்க்கை திடீரென தடைபட்டது. பல்வேறுகாரணங்களுக்காக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன் தனித்தனியாகவசிக்க ஆரம்பித்தனர்.
பிரிவுக்குப் பின் தீவிரமாக டிவி மற்றும் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். உடன் நடிக்கும் ஒரு டிவிநடிகருடனும் சீதா கிசுகிசுக்கப்படுகிறார்.
இந் நிலையில் தற்போது விவாகரத்து கோரி இருவரும் தனித்தனியாக குடும்ப நீதிமன்றத்தில்விண்ணப்பித்துள்ளனர்.
விவாகரத்து கேட்கும் தம்பதிகளின் மனு மீது 6 மாதம் கழித்தே விசாரணை நடத்தப்படுவது வழக்கம். இதனால்,அடுத்த மார்ச் மாதம் இவர்களது விவாகரத்து மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications