ஜெவுடன் பா.ம.க, காங் எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள்சந்தித்து பேசினர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏவான முருகவேல் ராஜன், தனது கட்சித் தலைமையுடன்சில காலமாக அதிருப்தியுடன் இருந்து வருகிறார். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் திடீரென முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
அதேபோல, மானாமதுரை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பாரமலையும்ஜெயலலிதாவைச் சந்தித்தார். இவர் காங்கிரஸ்- அதிமுக கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜெயலிலதாவைஆதரித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு எம்.எல்.ஏக்களும் தனித்தனியே போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். தொகுதிவளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இருவரும் ஜெயலலிதாவை சந்தித்தாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் பா.ம.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்குள் குழப்பத்தை உருவாக்கவும், அந்தக் கட்சிகளை உடைக்கவும்இந்த இருவரையும் ஜெயலலிதா பயன்படுத்துவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications