டெல்லியில் தமிழக போலீஸ் படை: கண்ணப்பனைக் கைது செய்ய மத்திய அரசு தடை?
சென்னை:
மத்திய அமைச்சர் கண்ணப்பனை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என தமிழக அரசுக்கு மத்தியஅரசிடம் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கண்ணப்பனைக் கைதுசெய்ய தமிழக போலீஸ் படை டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
சென்னை நகர காவல்துறை கமிஷ்னர் விஜய்குமாரும் டெல்லி விரைந்துள்ளதால் கண்ணப்பன் விவகாரத்தில்பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
கண்ணப்பனைக் கைது செய்ய பொடா நீதிமன்றத்தில் தமிழக அரசு வாரண்ட் பெற்றுவிட்டதாகவும், வாரண்டுடன்சிபிசிஐடி எஸ்.பி ஸ்ரீதர் மற்றும் டிஎஸ்பி பத்நாபன் ஆகியோர் தலைமையில் ஒரு படை டெல்லி சென்று தமிழ்நாடுஇல்லத்தில் தங்கியிருப்பதாகவும் தெரிகிறது.
இது குறித்து தனக்கும் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் கண்ணப்பன் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள அவர்கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை சட்டப்படி எதையும் செய்வதில்லை. எல்லாமே எடுத்தேன்,கவிழ்த்தேன் வேலைகள் தான். ஆனால், இந்த விஷயத்தில் பிரதமர் வாஜ்பாய் நியாயமான முடிவை எடுப்பார்என்றார்.
கண்ணப்பனைக் கைது செய்ய வசதியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி பிரதமர்வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடிதம் குறித்து ஆலோசனைகேட்டு அதை சட்டத்துறைக்கு அனுப்பி வைத்தார் வாஜ்பாய்.
இந் நிலையில் இன்று காலை மத்திய அரசிடம் இருந்து தமிழக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேசுக்கு ஒருகடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் பொடா சட்டப்படி கண்ணப்பனைக் கைது செய்ய முடியாது என்றும்,பொடா விதிகளை அவர் மீறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் கண்ணப்பன் விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் இன்று வாஜ்பாய் முக்கிய ஆலோசனைநடத்தத் திட்டமிட்டுள்ளார். இக் கூட்டத்திற்கு கண்ணப்பனும் அழைக்கப்பட்டுள்ளார்.
விவகாரம் இப்படி இருக்க சென்னை போலீஸ் கமிஷ்னர் விஜய்குமாரும் இன்று டெல்லி சென்றார். ஏற்கனவே,சிபிசிஐடி டீம் அங்கிருக்கும் நிலையில் கமிஷ்னரின் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கிடையே நக்கீரன் கோபாலின் வழக்குத் தொடர்பாகவே சிபிசிஐடி போலீசார் டெல்லி சென்றுள்ளதாகவும்,கமிஷ்னர் வேறு ஒரு வேலையாக சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications