ஜெ.வுக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
முதல்வர் ஜெயலலிதா 13ம் தேதி நாகப்பட்டனத்திற்கு வரும்போது அவருக்கு கருப்புக் கொடி காட்ட காவிரிடெல்டா மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூரில் நடந்த தமிழக விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்துஇரண்டாவது வருடமாக காவிரியில் தண்ணீர் இல்லாததால், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சம்பா பயிருக்காவது, கர்நாடகத்திடம் பேசி காவிரி நீரைப் பற்றிப் பேச முதல்வர் ஜெயலலிதாமுயற்சிக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரப்பட்டது.
காவிரி நீரைப் பெற்றுத் தர முதல்வர் ஜெயலலிதா தவறி விட்டதாகவும், எனவே நாகப்பட்டனத்திற்கு அவர்வரும்போது கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவது எனவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications