போலி நிதி நிறுவனங்களை தண்டிக்க புதிய சட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி நிதி நிறுவன மோசடிகளைத் தடுக்க தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த புதிய சட்டம் வெள்ளிக்கிழமை முதல்அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஏராளமான போலி நிதி நிறுவனங்கள் பொது மக்களின் கோடிக்கணக்கானபணத்தை மோசடி செய்து விட்டு தப்பின. தமிழகத்தையே உலுக்கிய இந்த நிதி நிறுவனங்களில் முதலீடுசெய்தவர்கள் கொடுத்த புகார்களின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு வழக்குகள் நடந்து வருகின்றன.

பணம் சிறிது சிறிதாக மீட்கப்பட்டு முதலீட்டாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.

போலி நிதி நிறுவனங்களைத் தடுக்க தமிழக அரசு, தமிழ்நாடு முதலீட்டாளர் நலச் சட்டத்தில் சில திருத்தங்களைக்கொண்டு வந்தது. இந்த மசோதாவிற்கு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி, பொதுமக்களின் பணத்தை மோசடி செய்யும் நிதி நிறுவனங்களின் அதிபர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள்ஆகியோரின் சொத்துக்களை முடக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனம் மீது சந்தேகம் வந்தால் கூட அந்த நிறுவனத்தின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்அதிகாரம் அளிக்கிறது. மேலும், போலி நிதி நிறுவனம் நடத்திக் கைதாகும் நபர்களை விசாக்க தனி நீதிமன்றம்அமைக்கவும், விசாரணையை 6 மாதத்தில் முடிக்கவும் இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

புதிய சட்டம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+