வாஜ்பாய் பதிலுக்காக காத்திருக்கிறோம்: ஜெயலலிதா
சென்னை:
மத்திய அமைச்சர் கண்ணப்பனை பொடா சட்டத்தில் கைது செய்து குறித்து பிரதமரின் பதிலுக்காகக்காத்திருக்கிறோம் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
விடுதலைப் புலிகளை ஆதரித்து மத்திய அமைச்சர் கண்ணப்பன் தொடர்ந்து பேசி வருகிறார். இது குறித்துபிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். அவரது பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்துப் பேசப்பட்டதா, இல்லையா என்றுஎனக்கு ஏதும் தெரியாது.
இந்த பிரச்சனை தொடர்பாக பிரதமருக்கு நான் எழுதிய கடிதம் உங்களிடம் (பத்திரிக்கைகளுக்கு)தரப்பட்டுவிட்டது. இதனால் எங்கள் கோரிக்கை என்ன என்பது உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்ணப்பன் விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.முடிவெடுப்பதை தள்ளி வைத்துள்ளோம் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக கண்ணப்பனைக் கைது செய்வது குறித்து தான் முடிவு செய்யும் வரை எந்த நடவடிக்கையிலும் தமிழகஅரசு இறங்கக் கூடாது என்ற தொணியில் பிரதமர் வாஜ்பாய் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியதுகுறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சட்ட அமைச்சகத்தின் விளக்க அறிக்கை வந்த பின்னரே முடிவு எடுக்கப் போவதாகவும் அந்தக்கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நேற்று முதல் அவர் ஒருவார கால வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளார்.பயணம் முடிந்து திரும்பிய பின்னரே இந்த விஷயத்தில் இறுதி முடிவை வாஜ்பாய் எடுப்பார்.
அதுவரை கண்ணப்பனை டெல்லியிலேயே தங்கியிருக்குமாறும் வாஜ்பாய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்துக்குச்சென்றால் கைதாகக் கூடும் என்பதால் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications