உருப்படாத ஊர்ப் பஞ்சாயத்துக்கள்: மீண்டும் இரு பெண்களுக்கு கொடுமை
பெரம்பலூர்:
உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தும் கூட ஊர்ப் பஞ்சாயத்துக்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. சமீபத்தில்செய்திகளில் அடிபட்ட பெரம்பலூர் மாவட்டத்தில், மீண்டும் ஒரு ஊர்ப் பஞ்சாயத்துக் கொடுமை நடந்துள்ளது.
பெரம்பலூர் அருகே சில மாதங்களுக்கு முன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த டெலிபோன் அதிகாரி சுகந்திஎன்பவரை, பஞ்சாயத்தார் முன்பு காலில் மண்டியிட்டு வணங்க வைத்த கொடுமை நடந்தது.
இதுதொடர்பாக சுகந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையின்போது ஊர்ப்பஞ்சாயத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சுகந்தியை பொது இடத்தில் மண்டியிட வைத்துமன்னிப்பு கேட்க வைத்தவர்களை, சுகந்தியிடம் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் அதே பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு இளம் பெண்களை ஊர்பஞ்சாயத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சந்திரா மற்றும் வேம்பு. இருவரும்,தங்களது பக்கத்து வீடான வெங்கட்டன் வீட்டில் ரூ. 600 திருடி விட்டதாக அவர்கள் மீது வெங்கட்டன் மற்றும்அவர் மனைவி ஊர்ப் பஞ்சாயத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரை விசாரித்த பஞ்சாயத்து தலைவர்கள், இருவரும் திருடினார்களா, இல்லையா என்பதைக் கண்டறிய இருவர்கைகளையும் கொதிக்கும் எண்ணெயில் முக்கச் சொல்லு உத்தரவிட்டுள்ளனர். திருடியிருந்தால் கை எரிந்து போகும்,இல்லாவிட்டால் கைக்கு எந்த பாதிப்பும் வராது என்று அந்த பஞ்சாயத்துக்கு கும்பல் கூறியது.
ஆனால், இரு பெண்களின் பெற்றோரும் கதறி அழவே, அதை விட்டுவிட்டு கையில் சூடம் ஏற்றச் சொல்லியுள்ளதுஅந்த காட்டுக் கும்பல்.
இதையடுத்து இளம் பெண்களின் கதறலையும் மீறி சூடம் ஏற்றப்பட்டுள்ளது. இதில் இருவரின் உள்ளங்கைகளும்பொசுங்கிப் போயின. இருவரும் வலி தாங்காமல் மயங்கி விழுந்த பின்னரே அவர்களை அந்த பஞ்சாயத்துக்கும்பல் விடுவித்துள்ளது.
கை எரிந்து போனதால் திருடியது இவர்கள் தான் என்று தீர்ப்பும் அளித்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பெரம்பலூர் யூனியன் தலைவர் ஆசான்முகம்மதுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஊருக்கு விரைந்த ஆசான் முகம்மத், இரு பெண்களையும் அரசுமருத்துமனையில் கொண்டு போய் சேர்த்தார்.
பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார். இதையடுத்து வெங்கட்டனை போலீசார் கைதுசெய்தனர்.
இந்தக் கொடுமையான தண்டனையைத் தந்த கோவில் பூசாரியையும், பஞ்சாயத்து உறுப்பினர்களையும் போலீசார்தேடி வருகின்றனர். இந்தக் காட்டுமிராண்டிக் கும்பல் தலைமறைவாகிவிட்டது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications