சோனியா- பிரியங்காவை விமர்சிக்கும் திரைப்படம்: போராட்டம் நடத்திய காங்கிரசார் கைது
சென்னை:
சென்னையில் திரையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் 4 பேருக்கு 15 நாள் சிறைக்காவல்அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா ஆகியோர் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி, தேகம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்ட தியேட்டர் முன் காங்கிரஸார் போராட்டம்நடத்தினர்.
தமிழகம் முழுவதிலும் தேகம் என்ற புதிய திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சோனியா,பிரியங்கா ஆகியோரின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும், அவர்களை தவறான முறையில்சித்தரித்துள்ளதாகவும் தெரிகிறது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் ராயபுரம் மனோ தலைமையிலான அக் கட்சியின்தொண்டர்கள், நேற்றிரவு ராயபுரத்தில் தேகம் படத்தைத் திரையிடப்பட்ட தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தியேட்டர் உரிமையாளர்கள் போலீசாருக்குத் தகவல் தந்தனதையடுத்துபோலீஸ் படை அங்கு விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். இதையடுத்து அப் பகுதியில் பரபரப்புஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் இன்று காலைஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இத்திரைப்படம் சோனியா, பிரியங்காவை விமர்சனம் செய்வது போல் உள்ளது என்று த.மா.க.தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து நிருபர்களிடம் பாலகிருஷ்ணன் கூறுகையில், மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு படம் காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா ஆகியோரை விமர்சனம் செய்வதாக உள்ளது.
இது தொடர்பாக உள்துறை செயலாளர் முனீர் ஹோதாவிடம் தொலைபேசியில் பேசினேன். அதற்கு அவர் அப்படிஎடுத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதன்படி சென்னையில் 4 தியேட்டர்களில் இப்படம் ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்த தியேட்டர் அதிபர்களுக்குநன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications