சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு: மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்
மேட்டூர்:
தஞ்சை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீரைத் திறந்துவிட முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் இப்போது தான் சம்பா நெல் சாகுபடிக்கு மேட்டூர் அணைதிறக்கப்படுகிறது. நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்துமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் அவ்வப்போது பெய்த மழை நீர் சேமித்து வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 72.26 அடி ஆக உயர்ந்தது.(மொத்தக் கொள்ளளவு 120 அடியாகும்). மேலும் அணைக்கு வினாடிக்கு 8,299 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது.
இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கடலூர் மாவட்ட நெல் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்துகாவிரி நீர் எந்த நேரமும் திறக்கப்படலாம் என்ற நம்பிக்கையுடன் கடந்த சில நாட்களாக அந்த மாவட்டங்களின்விவசாயிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந் நிலையில் நீரைத் திறந்துவிட பொதுப் பணித்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவு பிறப்பித்தார்.இன்று மாலை 5 மணி முதல் நீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் இப்போது இருக்கும் நீரை சுமார் 45நாட்களுக்கு நீரைத் திறந்துவிட முடியும். அதற்குள் சம்பா பயிரை நட்டு சாகுபடியையும் முடித்துவிட முடியும் என்றுவிவசாயிகள் கூறுகின்றனர்.
இன்று முதல் பத்து நாட்களுக்கு வினாடிக்கு 18,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. பின்னர் நீரின் அளவுபடிப்படியாகக் குறைக்கப்படும்.
கடந்த இரு ஆண்டுகளாக சம்பா மற்றும் குறுவைப் பயிர்களை இழந்து விவசாயிகள் எலிக்கறி திண்ணும் நிலைக்குத்தள்ளப்பட்டது நினைவுகூறத்தக்கது. இந்த ஆண்டு தான் விடிவு பிறந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications