நீதிமன்ற வளாகத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்
கோவை:
நீதிமன்ற வளாகத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவர் கைதுசெய்யப்பட்டார்.
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது முதல் மனைவி சாவித்திரி. இருவரும்கோவை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இதில் சமீபத்தில் அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டது.மாதந்தோறும் சாவித்திரிக்கு ரூ. 400 ஜீவனாம்சம்தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஜீவனாம்சம் தொடர்பாக இன்று காலை கோர்ட்டுக்கு வந்திருந்தார் சாவித்திரி.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த தங்கராஜ், கையில் வைத்திருந்த அரிவாளால் சாவித்திரியை ஓட ஓடதுரத்திசரமாரியாக வெட்டித் தள்ளினார்.
இதில் 13 இடங்களில் காயமடைந்த சாவித்திரி ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து வந்து தங்கராஜை சுற்றி வளைத்துப்பிடித்தனர். சாவித்திரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகதெரிகிறது.












Click it and Unblock the Notifications