For Daily Alerts
Just In
மேட்டூர் அணை இன்று திறப்பு:ஜெ. உத்தரவு
சென்னை:
மேட்டூர் அணை இன்று மாலை திறப்பதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
கர்நாடக அரசு காவிரியில் போதுமான தண்ணீரைத் திறந்து விடாத காரணத்தால், குறித்த காலமான அதாவதுஜூன் 12ம் தேதியன்று, காவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறந்து விட இயலவில்லை என்று ஜெ.கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையைஏற்று இன்று மாலை முதல் விநாடிக்கு 18,000 கன அடி நீர் என்ற விகிதத்தில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்திறந்து விடப்படும்.
இந்த நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, சம்பா சாகுபடியை முறையாகச் செய்து உற்பத்தியைஅதிகரித்துப் பலனைடய வேண்டும் என்று கூறியுள்ளார்.


