மருமகளிடம் செக்ஸ் கொடுமை: குடும்பத்துடன நீதிமன்றத்தில் ஆஜராக துணைவேந்தருக்கு நீதிபதி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Daughter in law Sangeethaமருமகளை பாலியல்ரீதியில் கொடுமைப்படுத்திய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சேதுபதிராமலிங்கம் வரும் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தால் செக்ஸ்ரீதியில் துன்புறுத்தப்பட்ட அவரது மருமகள் சங்கீதா ஒரு பொதுநிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதியையே சந்தித்து புகார் கொடுத்தார். கையெடுத்துக் கும்பிட்டு தனக்கு நேர்ந்தகொடுமைகளைச் சொன்னார்.

அதைக் கேட்டு கடும் கோபமடைந்த நீதிபதி உடனே அது குறித்து விசாரிக்குமாறு, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தமாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கீதாவின் புகார் பதிவு செய்யப்பட்டது.

VC Sethupathi Ramalingamஅந்த புகாரில், தனது கணவர் ராஜவேல் ராமலிங்கம் அமெக்காவில் இருப்பதாகவும், இதையடுத்து தனது மாமனார்சேதுபதி ராமலிங்கம் பாலியல்ரீதியாக தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், சேலையை உருவி பலமுறைகெடுக்க முயன்றதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து புகார் சொன்னதால் மாமியார், நாத்தனார் மற்றும் அவரது கணவர் ஆகியோர் வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

இயைடுத்து முன் ஜாமீன் கோரி குடும்பத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார் சேதுபதி ராமலிங்கம்.தனது மனுவில், மருமகள் சங்கீதா ஒரு மன நிாேயாளி என்றும், எனவே இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவித்துஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோயிருந்தார்.

இந் நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் சங்கீதா. அதில், எனது மாமனார்வரும் 17ம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதன் பிறகு வெளிநாட்டில் தங்க திட்டமிட்டுள்ளார்.எனவே அவருக்கு முன் ஜாமீன் தரக் கூடாது என்று கோரியிருந்தார்.

அவரது மனுவைப் பரிசீலித்த நீதிபதி கற்பக விநாயகம், சேதுபதி ராமலிங்கம் கூறியதைப் போல சங்கீதா மனநோயாளியாகத் தெரியவில்லை.

எனவே சங்கீதாவின் புகார் குறித்து சேதுபதி ராமலிங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வரும்செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

துணை வேந்தர் சேதுபதி ராமலிங்கம் கல்வியமைச்சர் செம்மலைக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+