தென் மாவட்ட அணைகள் நிரம்புகின்றன!
மதுரை:
தென் மாவட்ட அணைகள் மழையால் நிரம்பி வழிகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி வழிகிறது. மஞ்சளாறு, வைகைஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் தென் மாவட்ட விவசாயிகள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் மொத்த கொள்ளளவு 126 அடியாகும். தற்போது 126.5அடி தண்ணீர் உள்ளதால் அணை நிரம்பி வழிகிறது. தொடர்ந்து அப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைநிரம்பி வழிவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோல, மஞ்சளாறு அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 57 அடியாகும்.தற்போது அணையில் 45.50 அடி நீர் இருப்பு உள்ளது.
தென் மாவட்டங்களின் மிகப் பெரும் அணையான வைகை அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்துகன மழையும் பெய்து வருவதால் ஒரே நாளில் 6 அடி நீர் உயர்ந்துள்ளது.
வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இதில், தற்போது 33.7 அடி நீர் உள்ளது. தொடர்ந்துமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் வாய்ப்புள்ளது.
அதேபோல, பெரியார் அணையிலும் நீர் மட்டம் திருப்திகரமாக உள்ளதாக பொதுப்பணித்துறைஅதிகாரிகள்கூறியுள்ளனர். அணையில் தற்போது 121.5 அடி நீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 136 அடியாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications