வரதட்சணை கொடுமை: அதிமுக எம்.எல்.ஏ. கணவருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
வரதட்சணை கொடுமை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ. கருப்பாயியின் கணவர்கருப்பையாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் தொகுதி அதிமுக உறுப்பினர் கருப்பாயி. தனது கணவர் கருப்பையாவரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் கூறி சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் கருப்பாயி.
இதையடுத்து கருப்பையா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில்கருப்பையா மனு செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்துஉயர்நீதிமன்றத்தை அணுகினார் கருப்பையா.
அதை விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம், முதல் திருமணத்தை மறைத்து விட்டு கருப்பாயியை இரண்டாவதாகதிருமணம் செய்துள்ளார் கருப்பையா.மேலும், அடிக்கடி குடித்து விட்டு வந்தும் எம்.எல்.ஏ.வை சித்திரவதைசெய்துள்ளார். இவரை விடுவித்தால் கருப்பாயியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று போலீஸ் தரப்பில்கூறப்பட்டுள்ளது.
எனவே குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்படும் வரை கருப்பையாவை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்றுகூறி மனுவை நிராகரித்தார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications