கேரள அரசுக்கு எதிராக பந்த்: குமரி மாவட்ட மீனவர்கள் முடிவு
நாகர்கோவில்:
தமிழக மீனவர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துவிட்டு, நடவடிக்கைஎடுக்கமாமல் இருந்து வரும் கேரள மாநில அரசைக் கண்டித்து கன்னியாகும மாவட்டத்தில் பந்த் நடத்த மீனவர்கள்போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், நத்திரவிளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கொச்சி கடல் பகுதியில்மீன் பிடிக்கச் சென்றபோது, அவர்களை, கேரள மீனவர்கள் கடுமையாக தாக்கினர். 9 விசைப் படகுகளை தீ வைத்துஎரித்தனர்.
இதையடுத்து கடலில் குதித்து தமிழக மீனவர்கள் உயிர் தப்பினர். சில மீனவர்களைக் காணவில்லை,
இது குமரி மாவட்ட மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுமார் 2,000 தமிழகமீனவர்கள் கொச்சி துறைமுகத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தியஎர்ணாகுளம் கலெக்டரும் போலீசாரும் தவறு செய்த கேரள மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து முற்றுகையை தமிழக மீனவர்கள் வாபஸ் பெற்றனர். ஆனால், தவறு செய்த கேரள மீனவர்கள்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து மீனவர் போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்நாகர்கோவிலில் இன்று நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சர்ச்சில்பேசுகையில்,
கன்னியாகுமரியிலுருந்து களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலையில் குடும்பத்துடன் போராட்டம்நடத்துவோம்.
மாவட்டம் முழுவதிலும் பந்த்துக்கும் அழைப்பு விடுப்போம். பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டமீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் வரை தொடர் போராட்டங்கள் நடத்துவோம். உரிய பலன்கிடைக்காவிட்டால் கேரளாவுக்கு அத்தியாவசியப் பண்டங்களை ஏற்றிச் செல்லும் தமிழக வாகனங்களைத்தடுப்போம் என்றார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications