பொடா மறு ஆய்வுக் கமிட்டிக்கு அதிக அதிகாரம்: மத்திய அரசு முடிவு
டெல்லி:
பொடா மறு ஆய்வுக் கமிட்டிக்கு அதிக அதிகாரங்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம்இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மாநில அரசுகளை தடுத்து நிறுத்த கமிட்டிக்கு அதிகாரம் கிடைக்கும்.
பொடா சட்டத்தை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தவறாகப் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுஎழுந்ததாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுக, மதிமுக, பா.ம.க. ஆகிய கட்சிகளின் நெருக்குதல்காரணமாகவும் பொடா மறு ஆய்வுக் கமிட்டியை மத்திய அரசு அமைத்தது.
இந்தக் கமிட்டி பொடா வழக்குகளை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு தனது பரிந்துரைகளை வழங்கும் என்றும்அதன் பின்னர் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், வெறும் பரிந்துரை மட்டும் செய்யும் அதிகாரம் கொண்ட இந்தக் கமிட்டியே ஒரு கண்துடைப்பு தான்என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்டத்தையே வாபஸ் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.இதற்காக வரும் டிசம்பர் 1ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அந்த நேரத்தில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கும். அப்போது திமுக, மதிமுக ஆகியவைஅரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து பொடா விவகாரத்தைக் கிளப்பலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.
இதையடுத்து பொடா மறு ஆய்வுக் கமிட்டிக்கு அதிக அதிகாரம் வழங்க இன்று பிரதமர் வாஜ்பாய் தலைமையில்கூடிய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ்,
பொடா மறு ஆய்வுக் கமிட்டிக்கு அதிக அதிகாரம் வழங்கும் அவசர சட்டம் ஜனாதிபதி மூலம் வெளியிடப்படும்.வரும் நாடாளுமன்றக் கூட்டத்திலும் இது தொடர்பான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.
தற்போது நீதிபதி அருண் சகார்யா தலைமையில் மத்திய பொடா ஆய்வுக் கமிட்டி அமைக்கப்பட்டுளளது. புதிதாகக்கொண்டு வரப்படவுள்ள அவசர சட்டத்தின்படி பொடா மறு ஆய்வுக் கமிட்டிகளை மாநில அரசுகளும்அமைக்கலாம்.
பொடா தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கருதுபவர்கள் இந்தக் கமிட்டிகளில் முறையிடலாம். இதில் மத்தியகமிட்டியின் தீர்ப்பு ஒரு மாதிரியாகவும், மாநில கமிட்டியின் தீர்ப்பு வேறாகவும் இருந்தால் மத்திய கமிட்டியின்தீர்ப்பே இறுதியானதாக இருக்கும் என்றார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications