பறவைகளுக்காக பட்டாசுகளை தியாகம் செய்யும் கிராமம்!
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் கொல்லுக்குடிப்பட்டி கிராமத்தில், வழக்கம் போல இந்த தீபாவளியன்றும், யாரும் பட்டாசுவெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளியைக் கொண்டாடினர்.
மதுரை-காரைக்குடி நெடுஞ்சாலையில் உள்ளது இந்த கொல்லுக்குடிப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில்தீபாவளியன்று யாருமே பட்டாசு வெடிக்க மாட்டார்கள். சின்ன மத்தாப்பு கூட கொளுத்த மாட்டார்கள்.
பட்டாசுகளை இவர்கள் தியாகம் செய்தது பறவைகளுக்காக என்பதை அறிந்தால் ஆச்சயமாக இருக்கும். ஆனால்இவர்களுக்கோ, இது தங்களது கடமை என்ற உணர்வே உள்ளது.
கொல்லுக்குடிப்பட்டி அருகே உள்ளது வேட்டன்குடி பறவைகள் சரணாலயம். இங்கு மழை காலத்தில் பல்வேறுநாடுகளைச் சேர்ந்த பறவைகள் வருவது வழக்கம். பறவைகள் வருகை ஜூலை மாதம் முதலே தொடங்கி விடும்.எனவே இந்த காலகட்டத்தில் சரணாலயத்திற்கு அருகே உள்ள கொல்லுக்குடிப்பட்டி கிராம மக்கள், பறவைகளுக்குஎந்தவித இடையூறும் செய்யக் கூடாது என்பதற்காக தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டுஅதன்படி நடந்து வருகின்றனர்.
மேளதாளங்கள் முழங்குவது உள்ளிட்ட சப்தம் எழுப்பும் எதையும் அவர்கள் செய்வதில்லை. அதேபோலதீபாவளியன்று பட்டாசுகளும் வெடிப்பதில்லை. இந்த தீபாவளிக்கும் அவர்கள் பட்டாசு வெடிக்கவில்லை.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications