தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மீண்டும் துவக்கத்தில் இருந்து விசாரணை தொடங்கியது
சேலம்:
தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் கொல்லப்பட்டதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கொடைக்கானல் பிளசன்ட்ஸ்டே ஹோட்டல் வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்து தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர்வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ், தர்மபுரியில் தடுத்து நிறுத்தப்பட்டது. உள்ளேமாணவிகள் இருப்பதைக் கூட கண்டுகொள்ளாத அதிமுக கும்பல் பஸ்சுக்கு தீ வைத்தது.
அந்தக் கோர சம்பவத்தில் காயத்திரி, கோகிலவாணி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகளும் பரிதாபமாகஉயிரிழந்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.ஆனால், போலீஸ் மற்றும் அதிமுக கூட்டணி இந்த விசாரணையை திசை திருப்பியது.
வழக்கை அதிமுகவினருக்கு சாதகமாக போலீசார் நடத்தினர். அதிமுகவினரிடம் இருந்து பணம், கோழி பிரியாணி,குவாட்டர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு இந்த வேதனையான வழக்கை கேலிக்குறியதாக்கினர் காக்கிச்சட்டைகள்.
இதையடுத்து கருகி இறந்த மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். வழக்கின் போக்கைக் கண்டு கடும் கோபமடைந்த உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கைகிருஷ்ணகிரியில் இருந்து சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.
மேலும் விசாரணையை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதுகுற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 30 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்னர் வழக்கை அடுத்த மாதம்13ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்திற்குக் கொண்டு வரப்பட்டுபோலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications