இடைக்கால நிர்வாகம்: திட்டத்தை வழங்கினர் புலிகள்
கொழும்பு:
வட கிழக்கு இலங்கையில் இடைக்கால நிர்வாகம் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக தங்களதுதிட்டத்தை இன்று நார்வே அமைதிக் குழுவினரிடம் விடுதலைப் புலிகள் அளித்தனர்.
இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இது மிக முக்கியமான மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
இன்று புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன், இந்த திட்டத்தை நார்வே தூதர் ஹன்ஸ் பிரட்கரிடம்வழங்கியதாக புலிகளின் செய்தித் தொடர்பாளரான தயா மாஸ்டர் தெரிவித்தார். கிளிநொச்சியில் வைத்து இந்தத்திட்டம் ஹன்சிடம் தரப்பட்டது.
இதைத் தொடர்ந்து புலிகள் தரப்புடன் ஹன்ஸ் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இன்று மாலை கொழும்புதிரும்பும் ஹன்ஸ் பிரட்ஸ்கர், புலிகளின் திட்டத்தை இலங்கை அரசிடம் வழங்குவார்.
புலிகளின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அலுவலக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்க வாஷிங்டன் செல்லும் வழியில் இன்று காலை லண்டன் புறப்பட்டுச்சென்றார் ரணில். புலிகளின் திட்ட அறிக்கை கிடைத்தவுடன் அது குறித்து உடனடியாக ரணிலுக்குத் தகவல்தெரிவிக்கப்படும்.
புலிகளின் திட்டத்தை பெற்றுக் கொண்ட பின் நாளை (சனிக்கிழமை) அது தொடர்பான அரசின் பதில்தெரிவிக்கப்படும் என இலங்கை அரசியல் சாசன துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கூறினார்.
புலிகளின் திட்டம் குறித்து முஸ்லீம் கட்சியின் முக்கியத் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் ரணில் விவாதிப்பார்.நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர போதிய பொரும்பான்மை பெற முஸ்லீம் கட்சியின் ஆதரவும்தேவைப்படுகிறது.
புலிகளின் திட்டப்படி இடைக்கால நிர்வாக சபை அமைந்தால், தமிழர்கள் வாழும் வடகிழக்குப் பகுதி முழுமையும்அதிகாரப்பூர்வமாகத் புலிகளின் கட்டுக்குள் வந்துவிடும். மேலும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின்மேம்பாட்டுக்காக உலக நாடுகளின் நிதியை அவர்கள் நேரடியாகப் பெற இயலும். அந்த நிர்வாகம் 6ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
மேலும் திட்டப்படி இடைக்கால நிர்வாக சபையில், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடம்அளிக்க புலிகள் தயாராக உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications