பெண்ணை பிளேடால் தாக்கிய அதிமுக மகளிர் அணி புள்ளி
சேலம்:
சேலத்தில் பூக்கடையை ஆக்கிரமிப்பு செய்வதற்கு இடையூறாக இருந்த பெண்ணை பிளேடால் உடல் முழுவதும்கிழித்துக் காயப்படுத்திய அதிமுக பொதுக்குழு பெண் உறுப்பினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் குமரன் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் கோவிந்தன் மற்றும் தியாகராஜன். இருவரும் பூக்கடைவியாபாரிகள். இருவருக்கும் சொந்தமான பூக்கடை இருக்கும் இடத்தின் ஒரு பகுதியை அதிமுக மாநிலபொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட மகளிர் பேரவை தலைவி இந்திராணி என்பவருக்கு தியாகராஜன்வாடகைக்குக் கொடுத்துள்ளார்.
இதை எதிர்த்து கோவிந்தன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த இந்திராணி தனதுகுண்டர் படையுடன் வந்து அடிக்கடி மிரட்டியுள்ளார். பிரச்சனைக்குரிய இடம் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில்இருக்கும்போது, அந்த இடத்தில் சுவர் எழுப்ப இந்திராணி தனது ஆட்களுடன் வந்துள்ளார்.
அப்போது பூக்கடையில் இருந்த கோவிந்தனின் மனைவி சுவர் எழுப்ப அனுமதி மறுத்துள்ளார். இதனால்கோபமடைந்த இந்திராணி ஜாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த பிளேடை எடுத்து பூங்கொடியின் முகம், முதுகு, கைஉட்பட உடலெங்கும் கிழித்திருக்கிறார்.
முகம் வெட்டப்பட்டதால் மயங்கி விழுந்த பூங்கொடி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர்பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் இந்திராணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications