ரூ. 17 கோடி மோசடி: ஹட்கோ அதிகாரி வீட்டில் ரெய்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பிரபலமான அரிஹாந்த் தனியார் வீட்டு வசதி நிறுவனத்திற்கு, அரசுக்குச் சொந்தமான ஹட்கோநிறுவனம் நிதியுதவி வழங்கியதில் ரூ. 17 கோடி மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக, ஹட்கோ நிறுவனஅதிகாரி மற்றும் அஹாந்த் நிறுவன அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடிசோதனை நடத்தினர்.

தனியார் அமைப்பான அரிஹாந்த் வீட்டு வசதி நிறுவனம். வீடுகள் கட்டுவதற்கு தனியாருக்கு கடனுதவி வழங்கிவருகிறது. இந்த நிறுவனம், அரசின் ஹட்கோ நிறுவனத்திடமிருந்து ரூ. 18 கோடி கடன் வாங்கியுள்ளது.

இதில் ரூ. 1 கோடிக்கு மட்டுமே உரிய ஆவணங்களை அஹாந்த் காட்டியுள்ளது. மேலும் ரூ. 17 கோடி எந்தவிதமுறையான ஆவணங்களும் இன்றி இந் நிறுவனத்துக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சில கோடிகளை அரிஹாந்த் நிறுவனம், ஹட்கோ அதிகாரிகளுக்கு லஞ்சமாகத் தந்திருக்கலாம் என்றுதெரிகிறது.

அரிஹாந்த் நிறுவனத்திற்கு கடன் வழங்கப்பட்டபோது, ஹட்கோவின் சென்னை மண்டல தலைமை அதிகாரியாகஇருந்தவர் அருண்குமார். தற்போது இவர் ஹைதராபாத்தில் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் பல நகர்களிலும்ஏகப்பட்ட சொதுக்களை வாங்கிப் போட்டுள்ளார்.

இந் நிலையில் இன்று காலை 8 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் சென்னை அம்பத்தூரில் உள்ள அருண்குமாரின்வீடு, நாகர்கோவிலில் உள்ள வீடு மற்றும் ஹைதராபாத் வீடு, அவரது அலுவலகம் மற்றும் அரிஹாந்த் நிறுவனஉயர் அதிகாரிகள் சிலருடைய வீடுகள், அலுவலகங்கள் உள்பட மொத்தம் 10 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளில் பல கோடி சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாககூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+