மீண்டும் சூடு பிடிக்கிறது வட கிழக்குப் பருவ மழை
சென்னை:
சில நாள் இடைவெளிக்குப் பிறகு தமிழகம் முழுவதிலும் மீண்டும் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது.
தாமதமாகத் தொடங்கிய வட கிழக்குப் பருவ மழையால் தமிழகம் முழுவதிலும் நல்ல மழை பெய்து வந்தது.ஆனால் கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து விட்டது. சென்னையில் சுத்தமாக மழையே இல்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் வட கிழக்குப் பருவ மழை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலம்முழுவதிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனத்த மழைபெய்துள்ளது.
குற்றாலத்திலும் மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில்குளிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளிலும் பரவலான மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம்கமுதி அருகே காவடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி, அழகு ஆகிய இருவரும் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது இடி தாக்கியதில் உயிரிழந்தனர்.
சென்னையிலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் மழை பெய்யத் தொடங்கி காலை வரையிலும் பெய்தது.இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் வெப்பத்தின் கொடுமை குறைந்தது.
மழை இன்றும் தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications