12ம் தேதி மனிதசங்கிலி: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இந்து நாளிதழ் மற்றும் முரசொலி ஆசிரியர்கள், நிருபர்கள் மீது கைதுநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் கண்டித்து, வருகிற 12ம் தேதி தமிழகம் முழுவதிலும், மாவட்டத்தலைநகரங்களில் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 12ம் தேதி மாலை 3 மணி தல் 6 மணி வரை கருப்புச்சின்னத்துடன், திமுகவினர் மட்டுமல்லாது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், நடுநிலையாளர்கள் எனஅனைத்துத் தரப்பினரும் மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஒரு அரசைக் கலைப்பதற்கு இதை விடப் பெரிய காரணம்தேவையில்லை. இதுவரை எந்த ஆட்சியிலும் இதுபோல நடந்ததில்லை. எழுத்துரிமைக்கு எதிரான ஜனநாயகவிரோத செயலான இதை நடுநலையாளர்கள் கண்டிக்க முன்வர வேண்டும் என்றார்.

தலைவர்கள் கண்டனம்:

இந்து மற்றும் முரசொலி மீதான நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் கண்டனம்தெரிவித்துள்ளனர். ஜி.கே.வாசன் கூறுகையில், ஜனநாயகத்தின் தூணை அசைத்துப் பார்க்கும் செயல் இது என்றுகூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், ஜனநாயக வரலாற்றில் நீங்காத கருப்புப்புள்ளியாக இது இருக்கும் என்று கூறியுள்ளார்.

மதிமுக பொருளாளர் கண்ணப்பன் கூறுகையில், ஜனநாயகம், தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் இந்தசெயல்பாடுகள் தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றுகூறியுள்ளர்.

பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,தமிழகத்தின் அடித்தளத்தையே இந்த செயல் அசைத்து விடும்என்று கூறப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறுகையில், தவறுகளை திருத்திக்கொள்வதே மனித இயல்பு. ஆனால் நடப்பதைப் பார்க்கும்போது மேலும் மேலும் தவறுகளையே செய்துவருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+