தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்: பரிதி மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை தண்டனைக்கு தடை விதிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பரிதி இளம் வழுதிமனுத்தாக்கல் செய்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம் வழுதிக்கு 30 நாள் சிறை தண்டனை விதித்து கடந்த வெள்ளிக் கிழமை சட்டசபையில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து பரிதி சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
எனக்கு வேண்டுமென்றே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. என்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இது சட்ட விரோதமானது. தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும். என்னை விடுதலை செய்ய வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
இம் மனு நாளை நீதிபதிகள் சண்முகம், ராஜன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications