சட்டசபை கலைப்பு தேவையில்லை: சோ
சென்னை:
சட்டமன்றத்துக்கான அதிகாரங்களை மறு ஆய்வு செய்யக் கோரி பத்திரிக்கையாளர்கள் சார்பில் கையெழுத்துஇயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்துக் கட்சி எம்.பிக்களின் கையெழுத்தைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தைதுக்ளக் ஆசிரியரும் ராஜ்யசபா நியமன எம்.பியுமான சோ கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
அவர் கூறுகையில், அரசியல் சட்டத்தில் சட்டமன்றத்தின் உரிமை என்ன என்பதே இன்னும் முறையாகவரையறுக்கப்படவில்லை. ஒரு தாற்காலிக ஏற்பாடகத் தான் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எது உரிமை மீறல் என்பதற்கும் வரையறை இல்லை. யாருக்கும் புரியவும் இல்லை. இந் நிலையில் சட்டமன்றம்எதையாவது உரிமை மீறல் என்று சொன்னால் அது உரிமை மீறல் ஆகிவிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
இந்து விவகாரத்தை வைத்து அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று சிலர் கோருவது வேடிக்கையாகஉள்ளது. அப்படிச் செய்தால் 356வது பிரிவுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றார்.












Click it and Unblock the Notifications