குற்றவாளிக்கு நீதிபதி விதித்த நூதன நிபந்தனை!
சென்னை:
58க்கும் மேற்பட்ட போதைப் பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன் வழங்கிய சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம், நூதனமான நிபந்தனையும் விதித்தார்.
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் மீது 58க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.இவற்றில் பெரும்பாலானவை போதைப் பொருள் கடத்தல் வழக்குகளாகும்.
சில நாட்களுக்கு முன்பு, தன்னைப் பற்றி போலீஸுக்குத் தகவல் கொடுத்த ஒரு நபரை, கிருஷ்ணவேணியும்,மேலும் 2 பேரும் சேர்ந்து கடுமையாக தாக்கினர். இதுதொடர்பாக கிருஷ்ணவேணி மீது வழக்குத் தொடரப்பட்டது.இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.
முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம்,குற்றம் சாட்டப்பட்ட 3 பேரில் 2 பேருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பெண்மணிக்கு மட்டும்ஜாமீன் மறுப்பது நியாயமாக இருக்காது.
இருந்தாலும், கடுமையான நிபந்தனை விதித்து ஜாமீன் தரலாம் என்று நினைக்கிறேன். ஏதாவது நல அமைப்புக்குநன்கொடை கொடுக்க உத்தரவிடலாம் என்று நீதிபதி கூறியபோது, அந்த நன்கொடையை சென்னை உயர்நீதிமன்றவக்கீல்கள் சங்கத்திற்குக் கொடுக்கச் செய்யலாம் என்று அரசுத் தரப்பு வக்கீல் ஆலோசனை கூறினார்.
இதை ஏற்ற நீதிபதி, வழக்கறிஞர் நிவாரண நிதி என்ற பெயரில், புதிய கணக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றவழக்கறஞர்கள் சங்கம் தொடங்க வேண்டும். அதற்குக் கிருஷ்ணவேணி ரூ. 10,000 நன்கொடை வழங்கவேண்டும். இதை ஏழை வக்கீல்களின் உதவிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார் நீதிபதி.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications