ராஜிவ் கொலையில் சம்பந்தமில்லாமல் கைது: இலங்கை அகதி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிக்கு, வெளிநாடு செல்ல அனுமதி தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜி கொலை வழக்கில் சம்பந்தமே இல்லாமல் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

1991ம் ஆண்டில் அகதியாக இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர் விஜயராஜா என்ற குணராஜா. இவர் சேலம்அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். அதே ஆண்டு டிசம்பர் 21ம் தேதி இவரை கியூ பிராஞ்ச் போலீசார் கைதுசெய்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா கொலை வழக்குத் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச்செல்லப்பட்ட இவர் தடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அந்தக் கொலைக்கும்இவருக்கும் சம்பந்தம் இல்லை என தடா நீதிமன்றம் இவரை விடுவித்தது.

ஆனாலும் வெளிநாட்டினர் சட்டத்தை இவர் மீறியதாக மீண்டும் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ராஜிவ்காந்தி கொலை வழக்கிலும் சேர்க்கப்பட்டார்.

இந் நிலையில் தனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தான் இந்தியாவை விட்டுச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு விஜயராஜா கோரிக்கை விடுத்தார்.

ஆனால், ராஜிவ் கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்காக இவர் தேவைப்படுவதாகவும், இவரைப் பற்றிஇலங்கை அரசிடம் விவரம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை என்றும், பதில் வரும்வரை அகிதகள் முகாமை விட்டு வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என்றும் தமிழக அரசு கூறிவிட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜயராஜா வழக்குத் தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன், இவருக்கும் ராஜிவ் காந்தி கொலைக்கும் சம்பந்தம் இருப்பதற்குஎந்தவித ஆதாரமும் இல்லை. மேலும் அவரை இந்தக் கொலையில் தொடர்புபடுத்த முகாந்திரம் கூட இல்லை.

அந்தக் கொலையில் இவர் குற்றவாளியாகவோ, சாட்சியாகவோ கூட சேர்க்கப்படவில்லை. குற்றவாளிவெறும்யூகத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்து வைத்துக் கொண்டு, அவர் வெளிநாடு செல்வதைத் தடுக்கமுடியாது.

இதனால் அவர் வெளிநாடு செல்ல ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு உரிய அனுமதியைத் தர வேண்டும் என்றுநீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+