வைகோ, கோபால் வழக்குகள்: தமிழக அரசுக்கு பொடா மறு ஆய்வு குழு நோட்டீஸ்
டெல்லி & மதுரை:
பொடா சட்டத்தின் கீழ் வைகோவும், நக்கீரன் கோபாலும் கைது செய்யப்பட்டது சரியா என்று கேள்வி எழுப்பிதமிழக அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழு இன்று நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசுக்கு டிசம்பர் 2ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அந்தக் குழு உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கும் வகையில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்ட பின்இப்போது தான் இந்தக் குழு முதன்முறையாகக் கூடியது. நீதிபதி அருண் சகார்யா, இனாம்தார், ரஹ்மான்ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு நேற்று வைகோ, கோபால் உள்பட பல மாநிலங்களில் பொடாவில்கைதானவர்கள் குறித்து ஆய்வு செய்தது.
இன்று காலை கூடிய இக் குழு குறிப்பாக வைகோ, கோபால் வழக்குகளை எடுத்துக் கொண்டு விவாதித்தது.இதையடுத்து இன்று மாலை இந்த உத்தரவை தமிழக அரசுக்குப் பிறப்பித்தது.
வைகோ, கோபால் கைது குறித்து இந்தக் குழு பலமுறை தமிழக அரசிடம் ஆவணங்கள், விவரங்கள் கேட்டு கடிதம்எழுதியது. ஆனால், அதை அரசு கண்டுகொள்ளவில்லை. இந் நிலையில் திமுக, மதிமுகவின் நெருக்குதலால் இந்தக்குழுவுக்கு இரு வாரங்களுக்கு முன் கூடுதல் அதிகாரங்கள் தரப்பட்டன.
இதையடுத்து கடந்த வாரம் தான் ஒரு வழியாய் வைகோ குறித்த ஆவணங்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது.கூடவே, ஒரு கடிதத்தையும் அனுப்பியது. அதில், வைகோவின் வழக்கு விசாரணை பொடா நீதிமன்றத்தில் கடைசிகட்டத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் இந்த விவகாரத்தில் நீங்கள் (மறு ஆய்வுக் குழு) தலையிட முடியாது என்றரீதியில் உள்ளது அந்தக்கடிதம். அக் கடிதத்தையும் பொடா மறு ஆய்வுக் குழு இன்று ஆராய்ந்தது.
அதே நேரம் கோபால் கைது குறித்த ஆவணங்களை தமிழக அரசு இன்னும் அனுப்பவில்லை. ஆனால், அந்தஆவணங்களை வேறு வழிகளில் இந்தக் குழு கலெக்ட் செய்துவிட்டது.
இன்று முழுக்க இந்த இரு வழக்குகளையும் இக் குழுவினர் ஆராய்ந்தனர். பின்னர் குழுவின் தலைவர் நீதிபத்சகார்யா நிருபர்களிடம் கூறுகையில், வைகோ, கோபால் கைது சரிதானா என்று கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளோம். இந்த இரு வழக்குகள் தொடர்பான நீதிமன்ற வழக்கு விவரங்களையும் வரும் டிசம்பர் 2ம்தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளோம். மேலும் இந்த வழக்கின் போலீஸ் டைரியையும் சமர்பிக்கச்சொல்லியிருக்கிறோம்.
விவரங்களை அனுப்ப தமிழக அரசு மறுத்தாலோ, கால தாமதம் செய்தாலோ நாங்கள் இருக்கும் ஆவணங்களைவைத்து வழக்கை விசாரித்து முடித்துவிடுவோம் என்றார்.
வைகோவை பொடாவில் கைது செய்தது தவறு என்கிறீர்களா என்று கேட்டபோது, இது குறித்து நான்மேற்கொண்டு விவாதிக்க விரும்பவில்லை.
பொடாவின் கைதாகி சிறையில் இருக்கும் ஒவ்வொருவரின் மன வேதனைகளையும் கமிட்டி கருத்தில் கொள்ளும்என்றார்.
செஞ்சி பேட்டி:
இந் நிலையில் பொடா ஆய்வுக் குழு வைகோவுக்கு நியாயம் வழங்கும் என மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்கூறியுள்ளார். மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் பொடாவிதிமுறைகளை வைகோ மீறியதாகக் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதையே தான் மறு ஆய்வுக் குழுவிடமும் மத்திய அரசு தெரிவித்தது.
இதனால் பொடா மறு ஆய்வுக் குழு வைகோவுக்கு நியாயத்தை வழங்கும்.
வைகோ விவகாரத்தில் மத்திய அரசு மிக ஜாக்கிரதையாகவே தலையிட விரும்புகிறது. இந்த ஜாக்கிரதை உணர்வை,சிலர் வைகோவை மத்திய அரசு கை கழுவி விட்டதாகக் கருதுகின்றனர். அது தவறு என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications