இறங்கி வருகிறார் சந்திரிகா: ரணிலுடன் சமாதானத்துக்கு தயார்- புலிகளுக்கு பாராட்டு
கொழும்பு:
இலங்கை அரசியல் நடவடிக்கைகளில் முக்கியத் திருப்பமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயுடன் சமாதானமாகசெல்லத் தயார் என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
சந்திரிகா கடந்த சில தினங்களுக்கு முன், ரணில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 3 அமைச்சர்களின்பதவியைப் பறித்தார். பாதுகாப்பு, செய்தி, உள்துறைகளைத் தன் வசம் வைத்துக் கொண்டார். எமர்ஜென்சியைஅமலாக்கினார்.
இதனையடுத்து ரணிலுக்கும், அவருக்கும் இடையேயான அதிகார சண்டை வலுத்தது. ராணுவத்துறையை சந்திரிகாவைத்துக் கொண்டால் புலிகளுடன் பேச்சு நடத்துவது சாத்தியமல்ல என்று ரணில் கூறிவிட்டார்.
இதையடுத்து ரணிலுக்கு ஆதரவாக சமரச முயற்சியில் இருந்து நார்வேயும் விலகிக் கொண்டது. அதே நேரம்அமைதி முயற்சிகளுக்கு தங்களால் பங்கம் வராது என புலிகள் கூறியுள்ளனர்.
இதனால் உலக நாடுகள் மத்தியில் சந்திரிகா மீது அதிருப்தி பரவ ஆரம்பித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையைஉடனே தொடங்க வேண்டும் என அமெரிக்கா நேற்றும் கூட கோரிக்கை வைத்துள்ளது
இந் நிலையில் அதிபர் சந்திரிகா தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார். ரணிலுடன் சமரசம்செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ராணுவத்துறையை ரணிலுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் என்றும்சந்திரிகாவின் அரசியல் ஆலோசகர் மனோ டிட்டவெல்லா கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
அமைதி முயற்சிகள் தொடர வேண்டும் என்பதில் சந்திரிகா ஆர்வமாக இருப்பதால், ரணிலுடன் ராணுவஅதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார். ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய முடிவுகளைரணிலுடன் சேர்ந்து மேற்கொள்ள அதிபர் தயார்.
மேலும் அமைதி நடவடிக்கைகளிலும், போர் நிறுத்த நடவடிக்கைகளிலும் பிரதமருடன் இணைந்து பங்காற்றவும்விரும்புகிறார் என்றார்.
இந் நிலையில் இங்கிலாந்தின் பைனான்சியல் டைம்ஸ் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு சந்திரிகா அளித்துள்ளபேட்டியில்,
நார்வே தூதுக்குழுவின் முயற்சியால் நாட்டில் அமைதி திரும்புவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளும் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு பொறுப்புடன் நடந்து வருகிறார்கள் என்றுபாராட்டியுள்ளார்.
ராணுவத்துறையை ரணிலுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் என்று சந்திரிகா கூறியிருப்பது அவர் தனதுபிடிவாதத்திலிருந்து இறங்கி வருவதையேக் காட்டுகிறது. இதற்கு ரணில் அளிக்கும் பதிலில் தான் சமரச முயற்சிகள்மீண்டும் தொடங்குமா என்பதற்கான விடை கிடைக்கும்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications